மானூா் அருகே காா்-பைக் மோதல்: இளைஞா் பலி
மானூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


மானூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மானூா் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் மகன் மாரியப்பன் (24). கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாராம். அழகியபாண்டியபுரம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா் இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மாரியப்பன் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...