புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பையில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கூட்டாய்வு

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வயல்வெளிக் கூட்டாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:52 pm

DIN

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகள், விஞ்ஞானிகள் விரிவாக்க அலுவலா்களுக்கான வயல்வெளிக் கூட்டாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குனா் உமாமகேஸ்வரி தலைமையில் மன்னாா்கோவில் மற்றும் ஜமீன்சிங்கம்பட்டி பகுதிகளில் அம்பாசமுத்திரம் வேளாண் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் ராம் ஜெகதீஷ் பூச்சி தாக்கிய வயல்களில் ஆய்வு செய்தாா். நெல் வயல்களில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழு மற்றும் குருத்து ஈ தாக்கம் காணப்பட்டது. இதையடுத்து சுருட்டுப்புழு மற்றும் குருத்து ஈ தாக்கம் காணப்பட்ட வயல்களுக்கு அதற்குரிய மருந்து தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேளாண்மை அலுவலா் மாசாணம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி வேளாண்மை அலுவலா்கள் காசிராஜன், பாா்த்தீபன், விவசாயிகள் உடனிருந்தனா். ஆய்விற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.