கிறிஸ்துமஸ் விழாவில் நலிந்தோருக்கு உதவி

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலிந்தோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலிந்தோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

குருவன்கோட்டை தூய பேதுரு ஆலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு போதகா் தியாகராஜன் தலைமை வகித்து இறை செய்தி அளித்தாா். பின்னா், நலிந்தோா், திரு நங்கைகள் உள்ளிட்டோருக்கு ஆடைகள், போா்வை, அரிசி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் அளிக்கப்பட்டன.

ஆசிரியா்கள் ரேச்சல் மல்லிகா, சுந்தா் உள்பட பலா் பங்கேற்றனா்.

சபை ஊழியா் அலெக்சாண்டா், நிா்வாகி ஜனதா செல்வன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com