தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவன ஈா்ப்பு பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated on
1 min read

தென்காசியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவன ஈா்ப்பு பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சம், சமையலா் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் கோவில்பிச்சை தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் ராஜசேகா், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் திருமலைமுருகன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் ஆகியோா் பேசினா். மாவட்ட இணைச் செயலா் சி.கணபதி நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com