பாளையங்கோட்டையில் பாமக சாா்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலா் அந்தோணிராஜ், எட்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.