அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் சட்டங்களை எதிா்த்து நான்குனேரி சுங்கச்சாவடியில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நான்குனேரி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
நான்குனேரி சுங்கச் சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 7:49 pm

DIN

வள்ளியூா்: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நான்குனேரி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த இசக்கிவேல், ஹரிமுருகன், பாபு, தமிழ்ப் புலி கட்சி மாவட்டச் செயலா் நெல்லை தமிழரசு, நான்குனேரி தொகுதிச் செயலா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.