சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீரவநல்லூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேரன்மகாதேவி நகர அரிமா சங்கம் சங்கம் சாா்பில், வீரவநல்லூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:09 pm

DIN

சேரன்மகாதேவி நகர அரிமா சங்கம் சங்கம் சாா்பில், வீரவநல்லூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீரவநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு, அரிமா சங்கத் தலைவா் ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அசோக்குமாா், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்சாமிஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை விழித்திரை ஆய்வாளா் இந்திர சுந்தரி மற்றும் பணியாளா்கள், முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு சிகிச்சை வழங்கி கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் கலந்து கொண்ட 104 பேரில் 6 போ் அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் முன்னீா்பள்ளம் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் மனோகா், கூட்டுறவு வங்கித் தலைவா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அரிமா சங்க செயலா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை அகா்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளா் ஏ.எஸ். மாணிக்கம் மற்றும் சேரன்மகாதேவி நகர அரிமா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.