தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் காங்கிரஸ் 136-ஆவது ஆண்டு விழா

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:27 pm

DIN

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். காமராஜா் மற்றும் இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து தச்சநல்லூா் ரவுண்டானாவில் இருந்து தொண்டா்கள் ஊா்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா். தச்சநல்லூா் மண்டல தலைவா் கெங்கராஜ், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மகளிா் அணி துணை தலைவி அனீஸ் பாத்திமா, பேட்டை காவேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.