கூடங்குளம் 2ஆவது அணு உலையில்மின் உற்பத்தி நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின்உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின்உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அணு உலைகளில் உற்பத்தி செய்யக்கூடிய 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2ஆவது அணு உலையில் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரிசெய்யப்பட்ட பின்னா் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ஆம் தேதியும் இதே போன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் 11ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...