மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நெல்லையில் 21 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுக சார்பில் 21 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2020, 8:31 am

DIN

மின்கட்டண உயர்வைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுக சார்பில் 21 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் வேலைவாய்ப்பிழந்து பெரும் இன்னலில் இருக்கும் சூழலில், மின்கட்டணத்தை மிகவும் அபாயகரமாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலி மாநகரில் 21 இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டலம் கண்டிகைப்பேரி உழவர்சந்தை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட பொருளாளர் பா. அருண்குமார், பகுதிச்செயலர்கள் இரா.கோபி என்ற நமச்சிவாயம் (திருநெல்வேலி), அண்ணாதுரை (பாளையங்கோட்டை), மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மீரான், வட்ட செயலர்கள் அருள்இளங்கோ, செல்வகுமார், பத்மராஜ், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.ஏல்.ஏ. என். மாலைராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டையில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் தலைமையிலும், வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்டச் செயலர் மு.அப்துல்வஹாப் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல திருநெல்வேலி மாநகரில் மலையாளமேடு, பாட்டப்பத்து, ஹாமீம்புரம், குறிச்சி, குலவணிகர்புரம், சமாதானபுரம், கரையிருப்பு, தேனீர்குளம், பழையபேட்டை உள்பட மொத்தம் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்புக்கொடியேந்தியும், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.