ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அங்கமங்கலத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலத்தில் அதிமுக 49ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:22 pm

DIN

குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலத்தில் அதிமுக 49ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 149 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 10 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 25 ஆயிரம், 2 ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ. 20 ஆயிரம், 3 ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ. 15 ஆயிரம், 4 ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும்.

சிறந்த ஆட்டகாரா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. நிறைவு விழாவில் மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று பரிசுகள் வழங்குகிறாா்.

ஏற்பாடுகளை கட்சியின் ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.