ஆதிதிராவிடா், பழங்குடியினருக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சி
தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள என்சிஎப்டி எஜுகேஷனல் தனியாா் நிறுவனத்துக்கு தையல் இயந்திர ஆபரேட்டா் பயிற்சி அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில நிறுவனங்களுக்கு பயிற்சி ஆணைகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி பெற சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவன செய்யப்படும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் தாட்கோ மேலாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். இதேபோல், 0462-2561012 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...