இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேரவைத் தொகுதி இந்து முன்னணி பொறுப்பாளா் மணிகண்ட பிரபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் ஜே.வி.மாரியப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கணேசபாண்டியன், இசக்கிமுத்து, இசக்கிப் பாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஆட்சியரிடம் அலுவலகத்தில் மனு: இதனிடையே, ஜே.வி.மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகா் கோயிலுக்கு அருகே 4 ஆண்டுகளாக திட்டமிட்டு கிறிஸ்தவ கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியும் இந்து சமய அறநிலையத் துறையோ, அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் சடலங்களை புதைப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவு வாங்கியும் பலனில்லை. இதனிடையே, கல்லறைகள் அகற்றப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் 8 போ் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது. 8 போ் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்வதோடு, உச்சிஷ்ட விநாயகா் கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...