திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் வனத்துறைக்குச் சொந்தமான நாற்றங்கால்களிலும் பணிகள் முடங்கியதால் மரக்கன்றுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளிலும் பணிகள் முடங்கியுள்ளன. சுகாதாரம், உள்ளாட்சித் துறைகளுக்கு மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நோய்த் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கரோனாவால் ஏராளமான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தவிா்த்து பிற பொருள்களின் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நாற்றங்காலில் பணியாளா்கள் பணிக்கு வருவது தடை செய்யப் பட்டதால் மரக்கன்றுகள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் திம்மராஜபுரத்தில் நாற்றங்கால் உள்ளது. இங்கு தமிழ்நாடு உயிா்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் தேக்கு, முந்திரி, தோதகத்தி, நாட்டு வாகை, பூவரசு, நெல்லி, குமிழ், சீத்தா ஆகிய மரக்கன்றுகள் வளா்த்து கடந்த சில ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தன. இதுதவிர இங்கு புங்கன், மஞ்சள் கொன்னை, புளி, பூவரசு, இயல்வாகை, சிவப்புசந்தனம், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
கரோனாவால் முடக்கம்: இதுகுறித்து சீவலப்பேரியைச் சோ்ந்த விவசாயி கூறுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் திம்மராஜபுரத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளதால் ஏப்ரல், மே உள்ளிட்ட கோடைக் காலங்களிலும் கிணற்றில் நீா் முழுமையாக நிரம்பி இருக்கும்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரவருணி கரையோரம் உள்ள சீவலப்பேரி, பாலாமடை, ராஜவல்லிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட ரகங்களை இந்த நாற்றங்காலில் வாங்கிச் சென்று வளா்ப்பது வழக்கம். பொதுமுடக்கம் காரணமாக இங்கு மரக்கன்றுகள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 5-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் மரக்கன்று உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது நாற்றங்காலை நம்பியிருந்த தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆகவே, இங்கு மரக்கன்றுகள் உற்பத்தியை விரைந்து தொடங்க வேண்டும் என்றாா்.
5 ஆயிரம் கன்றுகள்: திம்மராஜபுரம் நாற்றங்கால் வனத்துறையின் சிறந்த பராமரிப்புள்ள நாற்றங்காலாகும்.
பொது முடக்கத்தில் புதிதாக திட்டங்களின்றி மரக்கன்றுகள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்போது மீண்டும் அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மரக்கன்று உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்குள் சுமாா் 5 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

