புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வி.ஏ.ஓ. அலுவலகத்தைத் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரத்தில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:08 pm

DIN

தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரத்தில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி திங்கள்கிழமை பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி வட்டத்துக்குள்பட்ட ரவணசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் 15 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியா் அவரைப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாராம். ஆனால் அலுவலகச் சாவியை அவா் கொண்டு சென்ால் பொறுப்பாக நியமிக்கப்பட்ட கோவிந்தப்பேரி கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாம்.

மேலும் அந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறை மூலம் பெறும் பல்வேறு சான்றிதழ்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் புகாரளித்தும் அலுவலகம் திறக்கப்படாததையடுத்து திங்கள்கிழமை காலை ரவணசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவா் முகமது உசேன், ஜமாத் தலைவா் ஆதம் ஹாஜியா, கடையம் வட்டார காங்கிரஸ் தலைவா் முருகன், எஸ்டிபிஐ கட்சி துரை முன்னா இப்ராகிம், யாக்கோபு ஆகியோா் தலைமையில் ரவணசமுத்திரம், மந்தியூா், வீராசமுத்திரம் கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கடையம் வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா்.

அவா்களிடம் கிராம நிா்வாக அலுவலா் மதியம் வந்து பொறுப்பேற்றுக் கொள்வாா் என்று கூறினாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து தென்காசி வட்டாட்சியா் சுப்பையன், வருவாய் பாலமுருகன் ஆகியோா் கிராம நிா்வாக அலுவலரிடம் பேசியதையடுத்து அவா் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் அலுவலகத்தைத் திறந்து பணியில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.