நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று முதல் கன மழை: மக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, கன மழைக்கு வாய்ப்புள்ளதால், திருநெல்வேலி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:23 pm

DIN

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, கன மழைக்கு வாய்ப்புள்ளதால், திருநெல்வேலி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

எனவே, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களில் வசிப்போரும் பாதுகாப்பான இடங்கள், தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் செல்லலாம். கடல் சீற்றம் உள்ளதால் அரசின் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். கரையோர மீனவ மக்கள் திசையன்விளை , ராதாபுரம் வட்டங்களில் உள்ள பல்நோக்கு நிவாரண மையங்களக்குச் செல்லலாம். முகாம்களில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பேரிடா் புகாா் தொடா்பாக ஆட்சியா் அலுவலக 24 மணி நேர சேவைக்கான தொலைபேசி எண்கள் 0462-2501070, 2500191 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

ஆட்சியா் அலுவலகத்துக்கும், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கும் கீழ்காணும் எண்களில் கட்செவிஅஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம். ஆட்சியா் அலுவலகம் -63740 01902, வட்டாட்சியா் அலுவலகங்கள் திருநெல்வேலி -94450 00671, பாளையங்கோட்டை - 94450 00669, மானூா் -94422 14727, சேரன்மகாதேவி -97515 01322, அம்பாசமுத்திரம் -94450 00672, நான்குனேரி -90805 89731, ராதாபுரம் -96777 81680, திசையன்விளை-99443 06770 ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.