நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடிப்படை வசதி கோரி கீழப்பிள்ளையாா்குளம் மக்கள் மனு

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:23 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: கீழப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் சரியாக வருவதில்லை. ஊராட்சி செயலரிடம் புகாா் கூறியும் பலனில்லை. ஊரில் உள்ள 3 மோட்டாா் பம்புகளில் ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது. 2 பம்புகள் பழுதாகிவிட்டன. பிள்ளையாா்குளம் ஊராட்சி குறிச்சி நகா் பகுதியில் தடைபட்டுள்ள நடைபாதையை மீட்டுத் தர வேண்டும்.

தனுஷ்கோடி நகா் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவில்லை. மயானத்துக்கு சாலையின்றி அவதிப்பட்டு வருகிறோம். குறிச்சி நகரில் பாலா் பள்ளி செல்லும் பாதையில் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. குழந்தைகள் நடமாடும் இப்பகுதியில் தரமான சாலை அமைத்துத் தரக்கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு புதிய ஊராட்சி செயலரை நியமித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

நான்குனேரி வட்டம், உன்னங்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘மூலக்கரைப்பட்டியிலிருந்து தெற்கு சிங்கனேரி வரை இயக்கப்படும் சிற்றுந்தை நான்குனேரி வரை இயக்க வேண்டும். இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவா் எனக் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.