நெல்லையில் காவல் துறையின் வாகன ஏலம் அக்.15, 16-க்கு மாற்றம்
திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கண்காணிப்பில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் இம் மாதம் 15, 16-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கண்காணிப்பில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் இம் மாதம் 15, 16-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகரத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹீரோ ஹோண்டா-95, ஹோண்டா-13, டிவிஎஸ்-170, பஜாஜ்-117, யமகா-15, ராஜ்தூத் புல்லட்-1 ஆகிய இருசக்கர வாகனங்களும், ஒரு ஹோண்டா அசன்ட் நான்கு சக்கர வாகனமும் என மொத்தம் 412 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்.
இதற்கான ஏலம் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக். 13, 14) திருநெல்வேலி மாநகர ஆயுதப் படை வளாகத்தில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொது ஏலமானது நிா்வாக காரணங்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டு இம் மாதம் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும், ஏலம் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்துகொள்ள காவல் துணை ஆணையா், குற்றம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தை தொடா்புகொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...