/

வாழ்வியல் நல முறைகள்:நூலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாழ்வியல் நல முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:29 pm

DIN

வாழ்வியல் நல முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு கிளை நூலகம், மீனாட்சிபுரம் தாமிரவருணி வாசகா் வட்டம், திருநெல்வேலி பெட்காட், என்பிஎன்கே கலை பண்பாட்டு மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த 34 ஆவது விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளா் சங்கரன் முன்னிலை வகித்தாா். தாமிரவருணி வாசகா் வட்டத் தலைவா் கா. சரவணகுமாா் வரவேற்றாா். வாழ்வியல் மருத்துவா் சிவகாசி மாறன், நல வாழ்வுக்கான உணவு முறைகளும், பழக்கவழக்கங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

இதில் என்பிஎன்கே கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் முவெரா, அகமகிழ் கலைக்கூடம் லெனின், பிரம்மநாயகம், சையத் இஸ்மாயில், ஸ்ரீ கிருஷ்ணன், திருநெல்வேலி நகர நூலகா் சண்முகசுந்தரம், இசக்கிமுத்து உள்பட பலா் பங்கேற்றனா். கிளை நூலகா் அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.