சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21

விவோ நிறுவனத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இன்று (மார்ச் 25) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Vivo Y11 5G, Y21 5G launched in India

விவோ ஒய் 11, விவோ ஒய் 21 - படம் / நன்றி - விவோ

Published On :

விவோ நிறுவனத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இன்று (மார்ச் 25) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவோ ஒய் 11 மற்றும் விவோ ஒய் 21 என இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

6500mAh பேட்டரி திறனுடன், திரை சுமூகமாக இயங்குவதற்காக 120Hz திறனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகியுள்ளன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய் 11, விவோ ஒய் 21 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ ஒய் 11, விவோ ஒய் 21 - சிறப்பம்சங்கள்!

  • விவோ ஒய் 11, விவோ ஒய் 21 என்ற இரு ஸ்மார்ட்போன்களும் 6500mAh என்ற அதீத பேட்டரி திறனுடன் வெளியாகிறது.

  • இதில், சார்ஜிங் வேகம் மட்டும் மாறுபடுகிறது. விவோ ஒய் 21 44W சார்ஜ் ஆகும் திறனும், விவோ ஒய் 11 15W சார்ஜ் ஆகும் திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • விவோ ஒய் 21 ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டுள்ளது. விவோ ஒய் 11 ஸ்மார்ட்போன் 13MP கேமரா கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன.

  • இரு ஸ்மார்ட்போன்களும் 6.74 அங்குல எச்.டி. திரை கொண்டுள்ளன.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையன.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1200 nits திறன் கொண்டுள்ளன.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளன.

  • விவோ ஒய் 21 ஸ்மார்ட்போன், 8GB உள்நினைவகம் (RAM) 128GB நினைவகம் உடையது.

  • விவோ ஒய் 11 ஸ்மார்ட்போன், 4GB உள்நினைவகம் 128GB நினைவகம் உடையது.

Summary

Vivo Y11 5G, Y21 5G launched in India with 6500mAh battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.