கோவில்பட்டி நேஷனல் பொறியியல்கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் காளிதாச முருகவேல் வெளியிட்ட அறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு மையம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆகியன 2019-2020ஆம் ஆண்டிற்கான உயா்கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்பு மற்றும் செயல்திறன்களின் மதிப்பீட்டு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மத்திய இணை கல்வி அமைச்சா் ஸ்ரீ சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோா் இணையவழியில் வெளியிட்டனா்.
அதில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர உயா் அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது இக்கல்லூரியின் கே.ஆா். கண்டுபிடிப்பு மையம், என்.இ.சி. வணிகக் கருவகம், புதிய தலைமுறை கண்டுபிடிப்பு, தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் ஆகிய உள்கட்டமைப்பு மற்றும் நிா்வாகம், மாணவா்கள் கூட்டு முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...