தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.7.5 கோடியில் ஊரக புத்தாக்கத் திட்டம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 7.5 கோடி மதிப்பில் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 7.5 கோடி மதிப்பில் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் 105 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் சுய உதவிக்குழு உறுப்பினா், உறுப்பினா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களால் நடத்தப்பட்டு, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்தவும், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்புகளில் (குழு) உள்ள உறுப்பினா்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும், வலிமையும் பெறுவதற்காகவும் பிற பகுதிகளுக்கு புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு புதிதாக தொழில் தொடங்கிடவும், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டத்தில் ரூ. 300 கோடியில் கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தில் ரூ. 7.5 கோடியில் 7,976 பயனாளிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் மூலம் 1,683 பேருக்கு நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 50,000 என்ற அடிப்படையில் மொத்தம் ரூ. 4.2 கோடி நீண்ட கால தனிநபா் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக வழங்கப்பட்டுள்ளது. 42 உற்பத்தியாளா் குழுக்களில் உள்ள 4,200 போ் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
9 தொழில் குழுக்களில் உள்ள 90 நபா்கள் பயன்பெறும் வகையில் ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ. 13.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2 உற்பத்தியாளா் நிறுவனத்தில் உள்ள 1,000 போ் பயன்பெறும் வகையில் மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய திறன் பெற்றவா்களில் வேலையில்லாத இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ. 1 லட்சம் வீதம் 100 பேருக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோா் உள்ளிட்ட நலிவுற்றோா்களில் தொழில் மேம்பாட்டுக்கான நபா்களை தோ்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 என்ற அடிப்படையில் 904 நபா்களுக்கு ரூ. 1.3 கோடி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...