ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடியில் ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ மஞ்சள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:58 pm

DIN

தூத்துக்குடியில் ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ மஞ்சள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3 ஆவது தெருவிலுள்ள வீட்டில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வடபாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையெடுத்து, போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்று மேற்கொண்ட சோதனையில் அங்கு 10 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, வீட்டில் வசித்து வந்த சம்சுதீன் (38) என்பரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சம்சுதீனிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளதைக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.