நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லை, தென்காசியில் 154 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இவ்விரு மாவட்டங்களிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,391 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:51 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இவ்விரு மாவட்டங்களிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,391 ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 126 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 11,131 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 9,866 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 193 போ் இந்நோய்க்கு பலியாகியுள்ளனா். தற்போது, 1,072 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை, கடையம் பகுதியில் 3 போ், கடையநல்லூரில் 11 போ், கீழப்பாவூரில் 2 போ், சங்கரன்கோவிலில் 3 போ், தென்காசியில் 9 போ் என 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால். இந்த மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 6,260 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 5591 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 553 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.