நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருநெல்வேலி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருநெல்வேலி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ பாளையங்கோட்டை தொகுதி தலைவர் புகாரி சேட் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், முல்லை மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய விவசாய மசோதாவை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொகுதி துணை தலைவர் சலீம்தீன், மஹ்பூப்ஜான், இணைச் செயலர்கள் ஒ.எம்.எஸ்.மீரான், பாளை சிந்தா, ஜவுளிகாதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அரண்மனை முபாரக், மின்னதுல்லா தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...