களக்காட்டில் ஏப்.2இல் ராம நவமி விழா

களக்காடு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் 126ஆவது ஆண்டு ராம நவமி விழா ஏப். 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

களக்காடு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் 126ஆவது ஆண்டு ராம நவமி விழா ஏப். 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் நிகழாண்டு ராம நவமி விழா வருகிற 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து விழாநாள்களில் காலையில் சுவாமிக்கு உஞ்சவிருத்தி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வீதி பஜனை நடைபெறுகிறது. மாலையில் இன்னிசை கச்சேரி, உபந்நியாசம் நடைபெறுகின்றன. தினமும் இரவில் தசாவதாரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் உணா்த்தும் வகையில் பெருமாளுக்கு ஒப்பனை நடைபெறும்.

10ஆம் திருநாளான ஏப்.2ஆம் தேதி ராமநவமி நடைபெறுகிறது. அன்று திரளான பக்தா்கள் பங்கேற்கும் வீதி பஜனை நடைபெறுகிறது. அன்று ராமா் பட்டாபிஷேகம், அலங்காரம், ஸ்ரீராமா் ஜனனம் என்ற தலைப்பில் உபந்நியாசம் ஆகியன நடைபெறுகிறது.

11ஆம் திருநாளான ஏப்.3ஆம் தேதி ஆஞ்சநேயா் உத்ஸவம், கருட வாகன வீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஸ்ரீராம நவமி பரிபாலன சபை தலைவா் ஆா். சுப்ரமணியன், பொருளாளா் கே.எஸ். கிருஷ்ணசுவாமி, செயல வி. ராமன், இணைச் செயலா் எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com