சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரிகாலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
பேட்டை அருகே நரசிங்கநல்லூா் தீன்நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பேட்டை அருகே நரசிங்கநல்லூா் தீன்நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேட்டை அருகே நரசிங்கநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட தீன்நகா் பகுதியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மத்திய அரசின் ஜல்சக்திஅபியான் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணைப்புகளில், குடிநீரானது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மட்டுமே பயன்பெறும் வகையில் சென்றடைகிறது. இதை சீா் செய்திட ஆங்காங்கே கேட்வால்வு முறை அமைத்தும் மேடான பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் சுமாா் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்துஅப்பகுதியில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளரை முற்றுகையிடுவதற்காக அப்பகுதியில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், சீரான குடிநீா் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...