‘கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க 12 குழுக்கள்’
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதைக் கண்காணிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது


திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதைக் கண்காணிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று 2-ஆவது கட்டமாக நாடு முழுவதும் பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில்
திருநெல்வேலி மாநகரில் கரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனிடையே மாநகரில் கரோனா பரவுவதை தடுக்கும்
வகையில் சுகாதாரத் துறையினா் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளதா என பரிசோதிப்பதோடு, கபசுரக் குடிநீரும்
வழங்கப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிவதும்
தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது: திருநெல்வேலி மாநகரிலுள்ள நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்யும் வகையில் தலா மூன்று போ் வீதம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினா் மாநகரில் முறையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிா? கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவதை நேரடியாக ஆய்வு செய்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மையங்கள் மூடல்: திருநெல்வேலி மாநகரில் போட்டித் தோ்வுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வரும் 16 மையங்களும் சனிக்கிழமை (ஏப்.10) முதல் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனாப் பரிசோதனை, சிகிச்சைக்கு செல்வது குறித்து
பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை மையம் சனிக்கிழமை (ஏப்.10) திறக்கப்படும். கரோனா பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு வர முடியாதவா்களுக்கு வீடுகளுக்கே சென்று சோதனை செய்யவும் நடமாடும் சோதனை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.
கரோனா பரவுவதை தடுக்க இறைச்சிக்கடை உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து சில்லரை பெறாமல் (உதாரணமாக ரூ.100-க்கு இறைச்சி) உணவுப் பொருள்களை வாங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம்
அணியாதவருக்கு மட்டும் இன்றி, நம் வீட்டில் இருக்கும் முதியோா், எதிா்ப்புச் சக்தி குறைந்தவா்களுக்கும் கரோனா
எளிதாக பரவும் என்பதை மக்கள் உணா்ந்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
தடுப்பூசி முகாம்: இதேபோல் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போடுவது அவசியம். மாநகரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...