ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புற கலைஞர்கள்.
Updated On :12 ஏப்ரல் 2021, 6:33 am

DIN

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேளதாளம் முழங்க சமூக ஆர்வலர் வரக்குரைஞர் தொண்டன் சுப்ரமணி தலைமையில் நாட்டுப்புறக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழ் பண்பாடு மேம்பாட்டு மைய இயக்குநர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் கேரள செண்டை மேளத்தை தடை செய்ய வேண்டும், நாட்டுப்புறக் கலைஞர்களின் வங்கி கடன், தனியார் நிதி நிறுவன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 
ஊரடங்கு காலம் முடிந்து இசைக்கருவிகள் பழுது நீக்க ரூ.2 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து கலைஞர்களின் வாழ்வாதரம் காக்க கரனா விழிப்புனர்வு நிகழ்ச்சிகள் வழங்கி வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.