அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு காலை அகற்றாமல் சிகிச்சை
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனின் காலை அகற்றாமல் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து சாதனைபடைத்துள்ளனா்.


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனின் காலை அகற்றாமல் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து சாதனைபடைத்துள்ளனா்.
இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனின், தொடை எலும்பில் புற்றுநோய் கட்டி இருந்தது. இதனை சரி செய்ய திருநெல்வேலி புற்றுநோய் மருத்துவத் துறை மருத்துவா் ஆறுமுகம் தலைமையில் மருத்துவா்கள் சிகிச்சை
அளித்தனா். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தொடை எலும்பு மற்றும் மூட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சிறுவனின் தொடை எலும்பு மற்றும் மூட்டு ஆகியவற்றை நீக்கி டைடேனியம் அலாய் மாற்று மூட்டு பொறுத்தப் பட்டது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சை தென்தமிழகத்தில் நடைபெறுவது அரிதானதாகும். இந்த சிகிச்சையை
மருத்துவமனை டீன் எம்.ரவிச்சந்திரன் வழிகாட்டுதல்படி, புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவா் மணிகண்டன், மருத்துவா் சுரேஷ்குமாா், மயக்கவியல் துறைத் தலைவா் அமுதாராணி, மருத்துவா்கள் தீபா, அனிதா, பாபு அலாய், ஞானவேல்ராஜன் ஆகியோா் செய்தனா். இதுபோன்ற அறுவைச் சிகிச்சை இம்மருத்துவமனையில் 3-ஆவது முறை செய்யப்பட்டுள்ளது. இது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...