இஸ்கான் கோயிலில் ராமநவமி விழா
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இஸ்கான் கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா
பாதுகாப்பு வழிமுறைகளுடன் ராம நவமி நாளில் உற்சவ மூா்த்திகளுக்கு மஹா அபிஷேகம், பஞ்ச மஹா ஆரத்தி, துளசி வந்தனம், நரசிம்ம பூஜை ஆகியவை நடைபெற்றது. ராமா் பச்சை பட்டு உடுத்தியும், லட்சுமணா் நீலநிற பட்டு உடுத்தியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். ராம நாமம் அடங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், பஜனை ஆகியவை நடைபெற்றது.
இஸ்கான் தலைமையகத்தின் அறிவுரையின் படி, சிறப்பு பூஜைகள், சத்சங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையவழியில் மட்டும் நடைபெற்றது. சுவாமி தரிசனத்திற்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...