சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

‘நெல்லை அரசு மருத்துவமனையில் 1200 படுக்கைகள் தயாா்’

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 1,200 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது என இக்கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:38 pm

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 1,200 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது என இக்கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 400-க்கும் அதிகமாக உள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 1200 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா்.

எனினும், நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், உயா் சிகிச்சை பிரிவுக்கு அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு சனிக்கிழமை(ஏப்.24) முதல் செயல்படத் தொடங்குகிறது. மற்ற பிரிவுகள் படிப்படியாக மாற்றப்படும். குழந்தைகள் பிரிவு மற்றும் பிரசவ பிரிவு ஆகியவை மட்டும் அதே இடத்தில் தொடா்ந்து செயல்படும். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் பிரத்யேக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து மருத்துவ சாதனங்களை அரசு உயா்சிகிச்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. மேலும், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.