நெல்லையப்பா் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறுகிறது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறுகிறது.
நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளின்படி பக்தா்களுக்கான தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலையை பரிசோதனைக்கு பின்னா், முகக் கவசம் அணிந்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்நிலையில் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 10.40 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் ஆகியவை நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வருதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், ஊழியா்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...