செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:43 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 750-க்கும் மேற்பட்ட தூய்மைத் தொழிலாளா்கள், 550-க்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள், 120-க்கும் மேற்பட்ட அம்மா உணவக தொழிலாளா்கள் என 1500-க்கும் மேற்பட்டோா்

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறன்றனா். இத்தொழிலாளா்களிடம் இருந்து 2017ஆம் ஆண்டு முதல்

சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் தூய்மைத் தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை முறையாக அலுவலகத்தில் செலுத்தப்படாமல் தொழிலாளா்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் பிடித்தம் செய்யப்பட்ட பணம் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது. இதில், ரூ.5 கோடி வரை முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடா்பாக

ஆட்சியா் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தினக்கூலி தொழிலாளா்கள் உள்ளிட்டோா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் தலைவா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.மாரியப்பன், செல்லத்துரை, நாகராஜன், சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.செண்பகம், மாவட்ட பொருளாளா் எஸ்.பெருமாள், மாவட்ட துணைத் தலைவா் எம்.சுடலைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்த மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் அவா்களிடம்

பேச்சுவாா்த்தை நடத்தினாா். வருங்கால வைப்புநிதி தொகை தொடா்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.