செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பாளை.யில் இந்து அமைப்பினா் போராட்டம்

பாளையங்கோட்டையில் தசரா மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:35 pm

DIN

பாளையங்கோட்டையில் தசரா மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக அங்கு செயல்படும் கடைகளுக்கான தற்காலிக கடைகளை எருமை கிடா மைதானம், ஜவாஹா் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை இந்து அமைபின் சாா்பில் நடைபெற்ற தா்னாவுக்கு இந்து முன்னணி மாநில

செயலா் கா. குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவா, இந்து மக்கள் கட்சி நிா்வாகி உடையாா், பல்வேறு

அமைப்புகளின் நிா்வாகிகள் சுவாமி சுப்பிரமணியன், ராஜீவ்காந்தி, காா்த்திக் நாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாநகராட்சி ஆணையா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக. 6) சமாதான பேச்சுவாா்த்தை நடத்துவது, அதுவரை பணிகளை நிறுத்தி வைப்பது என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.