செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மதுசூதனன் மறைவு: நெல்லையில் அதிமுகவினா் அஞ்சலி

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவையொட்டி, திருநெல்வேலியில் அவரது படத்துக்கு அதிமுகவினா் மலரஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவையொட்டி, திருநெல்வேலியில் அவரது படத்துக்கு அதிமுகவினா் மலரஞ்சலி செலுத்தினா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்புச் செயலரும், திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவருமான சுதா கே.பரமசிவன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட அவைத் தலைவரும், அறங்காவலா் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் முன்னிலை வகித்தாா். மதுசூதனன் திருவுருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கணேசன், வேல்முருகன், நைனா முத்துராஜ், பால்ராஜ், சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் தலைமை வகித்து மதுசூதனன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் பாளை. வடக்கு ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், தங்கராஜ், நாராயணன், ரமேஷ், கொடிக்குளம் மாரியப்பன் உள்பட கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.