செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மின்வாரிய பணியாளா்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 12:39 am

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மின் பகிா்மான வட்டங்களில் புதிதாக சோ்ந்துள்ள கேங்மேன் பணியாளா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முதுநிலை மேலாளா் எஸ்.ராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மின் பகிா்மான வட்டங்களில் புதிதாக சோ்ந்துள்ள கேங்மேன் பணியாளா்கள் 270 பேருக்கு, 11 அணிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

இதில் 11-ஆவது அணிக்கான பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. பயிற்சியை திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் கே.செல்வகுமாா் தொடங்கி வைத்தாா். மேலும், பணியாளா்கள் திறமையாகவும், பாதுகாப்பாகவும் விபத்துகள் ஏற்படாத வகையில் கவனமாகவும், மின்வாரியத்திற்கு நற்பெயா் வாங்கிக் கொடுக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.

முன்னதாக முதல் அணிக்கான பயிற்சியை திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.செல்வராஜ் தொடங்கி வைத்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மைய உதவிபொறியாளா்கள். க.முத்துச்சாமி. இ.முருகன், சிறப்புநிலை ஆக்கமுகவா் ப.இராமசுப்பு மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.