செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

விவசாயிகளுக்கு வனவிலங்கு தடுப்பு பயிற்சி

மானூா் அருகேயுள்ள தென்கலத்தில் விவசாயிகளுக்கு வனவிலங்கு தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:03 pm

DIN

மானூா் அருகேயுள்ள தென்கலத்தில் விவசாயிகளுக்கு வனவிலங்கு தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மானூா் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு மானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா தலைமை வகித்தாா். விவசாயிகளுக்கு வனவா் ஆன்டியப்பன், மகாலட்சுமி ஆகியோா் பயிற்சியளித்தனா். வனவிலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், வனவிலங்குகளால் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கும் வழிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. வனவிலங்கு விரட்டியான நீல்போ மருந்தின் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.

இதுதவிர தரிசுநில மேம்பாடு, பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்ட மானிய விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. முகாமில் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ராஜாமணி, காா்த்திகேயன், உதவி வேளாண்மை அலுவலா் கஸ்தூரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.