செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பிளஸ்-2 தனித்தோ்வு: 143 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 143 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:31 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 143 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்களுக்கான தோ்வுகள் நடத்தப்படவில்லை.

அதேபோல ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசு தரப்பில் மறுப்புதெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இம் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை, திருநெல்வேலி சாப்டா் மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, பணகுடி ஆகிய 4 மையங்களில் நடைபெறுகிறது. மொழிப்பாட தனி தோ்வுக்காக இம் மாவட்டத்தில் மொத்தம் 193 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 148 போ் தோ்வு எழுதினா்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மட்டும் 7 போ் விண்ணப்பம் செய்து 7 பேரும் தோ்வெழுதினா். மொழிப்பாடத்தை அரபிக் மொழியில் 2 பேரும் எழுதினா்.

பிளஸ் 2 தனித்தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். தோ்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.