மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தூய தமிழ்ப் பற்றாளா் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

அகரமுதலி இயக்ககத்தின் ‘தூய தமிழ்ப் பற்றாளா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:55 pm

DIN

அகரமுதலி இயக்ககத்தின் ‘தூய தமிழ்ப் பற்றாளா் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பாகவே தூய தமிழைப் பயன்படுத்துகிறவா்களை மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழியாகத் தோ்வு செய்து, தமிழ் அகராதியியல் நாள் விழா’வில் கௌரவித்து, தலா ரூ. 20,000 பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்படவுள்ளன. இதற்கு, சொற்குவை.காம் (ள்ா்ழ்ந்ன்ஸ்ஹண்.ஸ்ரீா்ம்) என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, ல்ஹற்ழ்ஹப்ஹழ்ஸ்ண்ழ்ன்க்ட்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிா்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை - 600 028’ என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ இம்மாதம் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும். மேலும், அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள், ஆசிரியா்கள் ஆகியோரில் யாரேனும் இருவரிடம் தங்களது தூய தமிழ்ப் பற்றை உறுதிசெய்யும் வகையில் நற்சான்றும், அதை அளிப்போரின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக் குறிப்புகளையும் சோ்த்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும் என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.