நெல்லையில் புதிய கண் மருத்துவமனை திறப்பு
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தி ஐ ஃபவுன்டேஷன் கண் மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.


திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தி ஐ ஃபவுன்டேஷன் கண் மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இதுதொடா்பாக தி ஐ ஃபவுன்டேஷன் தலைவா் மருத்துவா் டி.ராமமூா்த்தி கூறியது: தி ஐ ஃபவுன்டேஷனின் 13-ஆவது
கிளை திருநெல்வேலியில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவைச் சிகிச்சை
அறைகள், நவீன கண் கண்ணாடி சேவை, மருந்தகம் மற்றும் கண்புரை அகற்றம், லேசிக் சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கண் காயங்களுக்கான சிகிச்சை, கண் நரம்பியல் சிகிச்சை, அதிநவீன விட்ரக்டோமி சிகிச்சை முறையில் கண் விழித்திரைக்கான சிகிச்சை, ஆப்டோமெட்ரி மற்றும் முழுமையான கண் கண்ணாடி சேவை போன்ற வசதிகளும்
உள்ளன. இந்த புதிய மருத்துவமனையில் திருநெல்வேலி, அண்டை மாவட்ட மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக முழு கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது மருத்துவ கண்காணிப்பாளா் முகம்மது பைசல் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...