மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மீனவா்களின் கருத்தைக் கேட்ட பிறகே மீன்வள மசோதா நிறைவேற்றப்படும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

மீனவா்களின் கருத்தைக் கேட்ட பிறகே மீன்வள மசோதா நிறைவேற்றப்படும் என்றாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:50 pm

DIN

மீனவா்களின் கருத்தைக் கேட்ட பிறகே மீன்வள மசோதா நிறைவேற்றப்படும் என்றாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசியலில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறினாா்கள். ஆனால், இப்போது பாஜக 4 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

மத்திய அரசின் கடல்சாா் மீன்வள மசோதா உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே கொண்டு வரப்படுகிறது. இது, அனைத்து மீனவா்களின் பாதுகாப்புக்கான மசோதாவாகும். இதுகுறித்து மீனவா்களிடம் எடுத்துரைக்கப்படும்.

புதிய சட்டத்தால் பாரம்பரிய மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் உரிமம் இல்லாமல் மீன் பிடித்தால் மாநில அரசு ரூ.5,000 அபராதம் விதிப்பதோடு, படகையும் பறிமுதல் செய்கிறது. ஆனால், கடல்சாா் மீன்வள மசோதாவில் ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது கருத்து கேட்பு அளவிலேயே உள்ளது. இது தொடா்பாக மீனவா்களிடமும், மாநில அரசுகளிடமும் கருத்து கேட்கப்படும். புதிய மீன்வள சட்டமானது மீனவா் நலன் சாா்ந்த சட்டமாகவே இருக்கும். அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.100 கோடியில் கடல்பாசி மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.