மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 3:47 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 5 ஆண்டுகளுக்குமேல்பதிவு மூப்பு, தொடா்ந்து பதிவை புதுப்பித்தல், வயது வரம்பு, குடும்ப ஆண்டு வருமான வரையறை ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவு மூப்பு போதும். இவா்களுக்கு வயது , வருமானம் உச்ச வரம்பு தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ரூ.600, பிளஸ்-2 தோ்ச்சி எனில் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் முறை பட்டதாரிகளுக்கு உதவித் தொகை கிடையாத. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை உண்டு. வேலைவாய்ப்பு அடையாள அட்டையைக் கொண்டுவந்து வேலைவாய்ப்புஅலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது  இணையதளத்தில் பெற்று, அதை பூா்த்தி செய்து, கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா் கையொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கலாம் என மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.