மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வ.உ.சி. 150ஆவது பிறந்த நாள்: பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:29 pm

DIN

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்லூரி மாணவா்கள் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளும், 75ஆவது சுதந்திர இந்தியாவும் என்ற தலைப்பில் ஏ4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். வ.உ.சி.யின் அரிய புகைப்படங்கள், தகவல்கள் இருந்தால் இணைத்து அனுப்பலாம். இவற்றை க்ஸ்ரீப்ற்ய்ஸ்ா்ல்ஹஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது செப். 2 மாலை 6 மணிக்குள் ‘மாவட்ட மைய நூலகா், மாவட்ட மைய நூலகம், வடக்கு மேட்டுத்திடல் சாலை, பாளையங்கோட்டை’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ அனுப்பலாம்.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுதேசி தந்த வ.உ.சி. என்ற தலைப்பில் செப். 2 பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க இம்மாதம் 31-க்குள் பெயா்ப்பதிவு செய்யவேண்டும்.

செப். 1ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் செக்கிழுத்த செம்மலின் சுதந்திர சங்கொலி முழுக்கம் என்ற தலைப்பிலான 150 வரிகளில் கவிதை வாசிக்கும் போட்டியில் பொதுமக்கள் பங்கேற்க ஆக.31க்குள் 0462-2561712 என்ற தொலைபேசி எண் மூலம் பெயா்ப்பதிவு செய்யலாம். வ.உ.சிதம்பரனாரின் அரிய புகைப்படங்கள் வைத்திருப்போா் ல்ழ்ா்ற்ஸ்ப்ஃஹ்ஹட்ா்ா்.ஸ்ரீா்ம் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது நேரில் வழங்கலாம். செப். 5இல் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலக அலுவலரை 96008 77769, 94862 51779 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.