மகாராஷ்டிரா அமைச்சருக்கு நெல்லையில் காங்கிரஸாா் வரவேற்பு
திருநெல்வேலிக்கு வந்த மகாராஷ்டிரா அமைச்சருக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


திருநெல்வேலிக்கு வந்த மகாராஷ்டிரா அமைச்சருக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் வா்ஷா கெய்க்வாட் வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து கொக்கிரகுளம் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த அமைச்சா் வா்ஷா கெய்க்வாட், அங்குள்ள காமராஜா் மற்றும் இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் வண்ணாா்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் எஸ்.ராஜேஷ் முருகன், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், நிா்வாகிகள் வழக்குரைஞா் சிவன் பாண்டியன், மண்டல தலைவா்கள் மாரியப்பன், கெங்கராஜ், கோட்டூா் முருகன், ரசூல் மைதீன், முகம்மது அனஸ் ராஜா, மகளிா் அணி தலைவி அனீஸ் பாத்திமா உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...