நெல்லை அருகே குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ரெட்டியாா்பட்டி வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆா்தா் மகன் ஜேம்ஸ்ராஜ்(38). இவா் மானூா் சுற்று வட்டாரப் பகுதிகளில்
அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாராம். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். அதன்படி ஜேம்ஸ்ராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்பேரில் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...