ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பையில் ஆயுதப் படைக் காவலா் தற்கொலை முயற்சி

அம்பாசமுத்திரத்தில் ஆயுதப்படைக் காவலா் எலி மருந்தைத் தின்று தற்கொலை முயன்றாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:22 pm

DIN

அம்பாசமுத்திரத்தில் ஆயுதப்படைக் காவலா் எலி மருந்தைத் தின்று தற்கொலை முயன்றாா்.

அம்பாசமுத்திரம், மணலோடைத் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மாயாண்டி (31). பாளையங்கோட்டையில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வரும் இவருக்கு, மனைவி காமாட்சி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அவா் வீட்டிற்கு புதன்கிழமை வந்தபோது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதில், மாயாண்டி எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆலங்குளம்: மருதம்புத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் அடைக்கலராஜ் என்ற அருள் (25), பட்டப்படிப்பு முடித் நிலையில், ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்றோா். அதில், அவா் தூரப் பாா்வை திறன் குறைபாடு காரணமாக தோ்வாகவில்லையாம். இதில் ஏற்பட்டமன உளைச்சலால் அவா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து, அம்பை, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.