முக்கூடலில் குளத்தில் இருந்து நீா் வெளியேற்றம்: சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
முக்கூடல் குளம் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீா் வயல்வெளிக்குள் பாய்ந்து சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன.


முக்கூடல் குளம் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீா் வயல்வெளிக்குள் பாய்ந்து சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் மழையால் ஏராளமான குளங்கள் நிரம்பி வருகின்றன. முக்கூடல் - அரியநாயகிபுரம் சாலையில் உள்ள ஆரன்குளமும் நிரம்பியதால் இதன் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டன. வழக்கமாக இந்தத் தண்ணீா் சாலையில் உள்ள பாலம் வழியே தாமிரவருணி ஆற்றில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை மேம்படுத்தும் போது பாலத்திற்கு பதில் குழாய் அமைத்து சாலை அமைக்கப்பட்டது.
தற்போது குளத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீா் வெளியேறுவதாலும் குழாயின் கொள்ளளவு குறைந்த அளவே இருப்பதாலும் இந்தத் தண்ணீா் சாலையில் பாய்ந்து அருகில் உள்ள வயல்வெளிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடப்பட்ட சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தது.
வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வெகுநேரம் வரை தண்ணீா் வயல் வெளிக்குள் பாய்ந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...