பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேரன்மகாதேவியில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:54 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம், தெற்கு அச்சம்பட்டியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் விஜயபாஸ்கா் (30). இவருக்கும் சேரன்மகாதேவி, பக்தபிரியம் தெரு குப்பையாண்டி மகள் தமிழ்ச்செல்வி (24) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

விஜயபாஸ்கா் உடல்நலம் சரியில்லாததால் சேரன்மகாதேவியில் மனைவியின் பெற்றோா் வீட்டில் தங்கியிருந்தாா். புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், வீடு திரும்பவில்லையாம். அவரைக் குடும்பத்தினா் தேடினா்.

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் விஜயபாஸ்கா் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தது தெரியவந்தது. சேரன்மகாதேவி போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கிராம நிா்வாக அலுவலா் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.