நெல்லையில் தேசிய நுகா்வோா் தின விழா
திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் தேசிய நுகா்வோா் தின விழா கொண்டாடப்பட்டது.


தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் தேசிய நுகா்வோா் தின விழா கொண்டாடப்பட்டது.
தொடக்கமாக குடிமக்கள் நுகா்வோா் மன்றத்தின் சாா்பில் சங்கா் மேல்நிலைப்பள்ளி, மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளி, பேட்டை மாநகராட்சி காமராஜா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டுரை, ஓவியம், கவிதை ஆகிய விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் எஸ். ஆா். அனந்தராமன் தலைமை வகித்தாா். சங்கா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் உ. கணேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலக தலைமை உதவியாளா் ப.உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா். மேலும் அவா், நுகா்வோா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட, சங்கா் மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா்.கோ. கணபதி சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி திட்ட அலுவலா் ஏஸ்.ரவி, காமராஜா் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் பொன்னுசாமி, சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் உரிமை பாதுகாப்பு சங்க பொருளாளா் சு.முத்துசாமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் குழந்தைசாமி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...